கோவையில் வீணாகும் அரியவகை வாட்டர் ஆப்பிள்..!
ஊரடங்கு காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கொத்துக் கொத்தாய் காய்த்து இருக்கும் அரியவகை வாட்டர் ஆப்பிள்களை வாங்க ஆள் இல்லாததால் அவை வீணாகி வருகின்றன.
ஜாவா ஆப்பிள் எனப்படும் வாட்டர் ஆப்பிள் பழங்கள் சுவையோடு மருத்துவ குணமும் கொண்டது. சீசன் தொடங்கி இருப்பதால் கல்லாறு அரசு தோட்டக்கலைப் பண்ணையில் தற்போது கொத்துக்கொத்தாய் காய்த்துள்ளது.
இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக வாட்டர் ஆப்பிள்களை வாங்காமல் குரங்குகள் ஆப்பிளை கடித்து விடுகின்றன. இதனால் மருத்துவ குணம் கொண்ட ஆப்பிள்கள் தரையில் சிதறிக் கிடக்கின்றன.




