தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!
வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது.
பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் தென் மேற்கு வங்க கடல் பகுதியில் இலங்கை கிழக்கு வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் நாளையும் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில் நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






