--- --:--:-- --

ஊழலில் ஈடுபடும் மத்திய அரசு ஊழியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு அளிக்க மத்திய அரசு உத்தரவு…!

9

ழலில் ஈடுபடும் மத்திய அரசு ஊழியர்களுக்கு பொதுநலன் கருதி முன்கூட்டியே ஓய்வு அளிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய பணியாளர் நலத் துறை வெளியிட்டுள்ள உத்தரவில் மத்திய அரசு ஊழியர் ஒருவரின் செயல் திறனை ஆய்வு செய்வதற்கும் தேவைப்பட்டால் பொதுநலன் கருதி அவரை முன்கூட்டியே ஓய்வு பெற செய்வதற்கும் அதிகாரம் உள்ளதாக தெரிவித்துள்ளது.

 

இதன்படி 50 அல்லது 55 வயதை எட்டியவர்கள் மற்றும் 30 ஆண்டுகள் பணி முடித்தவர்களின் பணிப் பதிவேட்டை பராமரிக்குமாறு சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஊழலில் ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் பணித்திறன் இல்லாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முன்கூட்டியே ஓய்வு அளிக்கப்படும் ஊழியர்களுக்கு மூன்று மாத நோட்டீஸ் அல்லது மூன்று மாதம் ஊதியம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon