சீனா செய்துள்ள முதலீடுகள் சந்தேகம் எழுப்பும் வகையில் உள்ளது..!
இந்தியாவில் சில தொழில் நிறுவனங்களில் சீனா செய்துள்ள முதலீடுகள் சந்தேகம் எழுப்பும் வகையில் இருப்பதாகவும் இது குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு இந்த கோரிக்கையை மத்திய அரசுக்கு விடுத்துள்ளது.
தகவல் தொழில்நுட்பம், உணவு விநியோகம், போக்குவரத்து, மருந்து, மருத்துவம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த புத்தாக்க நிறுவனங்களை சீன நிறுவனங்கள் செய்திருக்கும் முதலீடு இந்திய மக்களின் சில முக்கியமான தகவல்களை சேகரிப்ப தான் என தோன்றுவதாகவும் எனவே இது குறித்து விரிவான விசாரணை தேவை என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயலுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் வர்த்தகர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் சீன முதலீடுகள் எதையும் நேரடியாக இந்தியாவிற்குள் அனுமதிக்கக்கூடாது என்றும் ஒவ்வொரு முதலீட்டையும் அரசு பரிசீலனைக்கு பின்பு அனுமதிக்க வேண்டும் என்றும் வணிகர் கூட்டமைப்பு கூறியுள்ளது.






