--- --:--:-- --

இனி பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்..!

3

ள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

 

புதுக்கோட்டை அரசு ராணியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் மாணவிகளுடன் கலந்துரையாடினர்.

 

அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அன்பில் மகேஷ் பள்ளிகளில் மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்கு மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.

 

மேலும் புகார் தெரிவிப்பதற்காக பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு இருப்பதை சுட்டிக் காட்டியவர் பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

 

Right Menu Icon