--- --:--:-- --

சிபிஎஸ்சி பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை..!

10

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சிபிஎஸ்சி பொதுத் தேர்வுகள் ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால் டெல்லியில் 6 லட்சம் மாணவர்கள் சிபிஎஸ்சி தேர்வு எழுத உள்ளனர் என்றும் இது பெரிய அளவிலான பரவலுக்கு வழிவகுக்கும் என்றும் கூறினார்.

 

மத்திய அரசு சிபிஎஸ்சி தேர்தல்களை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்ட கெஜ்ரிவால் குழு மதிப்பீட்டின் அடிப்படையில் மாணவர்களை தேர்ச்சி பெற செய்யலாம் எனக் கூறினார்.

 

டெல்லியில் மீண்டும் முழு ஊரடங்கு கிடையாது என்ற அவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க திருமண மண்டபங்கள் ஹோட்டல்கள் விடுதிகள் உள்ளிட்டவைகளை மீண்டும் கோரோனசிகிச்சையை மையமாக மாற்ற திட்டம் வைத்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்.

Leave a Reply

Right Menu Icon