சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் நாளை முதல் தொடங்குகிறது சிபிஐ விசாரணை..!
தந்தை, மகன் சித்திரவதை கொலை வழக்கில் நாளை முதல் விசாரணையை தொடங்க இருப்பதாக உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தகவல் தெரிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை மேற்கொண்டார். இதில் 10 பேர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றன.
நாளை முதல் சிபிஐ இந்த விவகாரம் தொடர்பாக தன்னுடைய விசாரணையை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சாத்தான்குளம் தந்தை மகன் சித்திரவதை கொலை தொடர்பாக நாளை முதல் சிபிஐ தன்னுடைய விசாரணையை தொடங்க உள்ளது. கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி அல்லது சிபிஐ 15 நாட்களுக்குள் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக சிபிஐ சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் நாளை காலை விமானம் மூலம் தமிழகம் வந்து விசாரணையை தொடங்க இருப்பதாக சிபிஐ தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஐயால் கைது செய்யப்பட்டவர்களை கைது செய்யப்பட்ட முதல் 15 நாட்கள் முடிவதற்குள் உடனடியாக காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என நீதிபதிகள் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
சாத்தான்குளம் தந்தை, மகள் உயிரிழந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து வழக்காக விசாரிக்க உத்தரவு பிறப்பித்து வருகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கமும் முன்பாக வந்துள்ளது. வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு தரப்பில் சிபிசிஐடி இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இது வரை காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி காவல் ஆய்வாளர் ராமகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமை காவலர் ரேவதி உட்பட சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பான மனுவும் தாக்கல் செய்யப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜூலை 7ஆம் தேதி டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இந்த விவகாரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிபிஐயின் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் நாளை விசாரணையை தொடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







