மதுரை இளைஞர்கள் உருவாக்கியுள்ள ஆன்லைன் வகுப்புக்கான ஆடெம் செயலி..!
ஆன்லைன் வகுப்பிலுள்ள பிரச்சினைகளை தீர்க்கும் விதமாக பிரத்யேக செயலி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள் மதுரையை சேர்ந்த இளைஞர்கள். மதுரையை சேர்ந்த பிரவீன், தனசேகர், சமீர், பாலா, தினேஷ், கவுதம் ஆகியோர் ஆடெம் என்ற செயலியை உருவாக்கியுள்ளனர். இந்த செயலியில் கணினி, ஸ்மார்ட்போன்களில் ப்ளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த செயலியின் மூலம் மாணவர்களுக்கு நேரலையில் வகுப்புகள் நடத்த முடிவதோடு பாடங்களை பதிவு செய்து வெளியிடலாம். மேலும் தேர்வுகள் மற்றும் வீட்டு பாடங்களை பதிவிட்டு கொள்ளலாம்.
மாணவர்களுக்கு பாடம் சார்ந்த புத்தகங்கள், வீடியோக்கள், பிடிஎஃப், மைக்ரோசாஃப்ட் ஆவணங்களை பதிவிட்டு அவற்றையும் படித்துக் கொள்ளக் கூடிய வசதிகளை ஏற்படுத்தி இருப்பதாக இதனை உருவாக்கியவர்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய இந்த செயலிக்கு மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
கொரொனா தாக்கம் எப்போது கட்டுக்குள் வரும் எப்போது வகுப்புகள் துவங்கும் என்பது தெரியாத நிலையில் வகுப்புகளை நடத்த இந்த வழியேஇருப்பதால் இந்த செயலியை அனைவரும் பயன்படுத்தும் வகையில் பரவலாக வேண்டும் என்கிறார்கள் ஆடெம் செயலியை உருவாக்கிய இளைஞர்கள்.







