திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராசா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்..!
சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராசா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அவரது மனைவி பரமேஸ்வரி, உறவினர் பரமேஷ்குமார், கூட்டணி கிருஷ்ணமூர்த்தி மற்றும் சில தனியார் நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ஆறு பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், 5 பேர் மீது சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.





