சாதிவாரி கணக்கெடுப்பு: பா.ம.க முயற்சிக்கு கிடைத்த பலன்; மோடிக்கு நன்றி – ராமதாஸ்
மக்கள்தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்தியாவில் சமூகநீதியை நிலைநிறுத்த வகை செய்யும் இந்த முடிவு மிகவும் சிறப்பானது.
சாதிவாரி கணக்கெடுப்பு பா.ம.க-வின் 30 ஆண்டுகளுக்கும் மேலான முயற்சிக்கு கிடைத்த பலன் ஆகும்; பிரதமர் மோடிக்கு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்க்கொள்கிறேன் என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.





