மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!
கைது செய்யப்பட்டுள்ள சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணு மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய அவரை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
ரகசிய இடத்தில் அவரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.





