--- --:--:-- --

தவெக தொடர்பான முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடும் விஜய்..!

1

டிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், தனது கட்சி தொடர்பான முக்கிய அறிவிப்பை இன்று காலை 11 மணிக்கு வெளியிட உள்ளார்.

 

முன்னணி நடிகரான விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் எனும் பெயரில் கட்சி தொடங்கி, அதற்காக தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து இருந்தார். இதையடுத்து, தவெக கட்சி தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என தேர்தல் ஆணையம் விளம்பரம் வெளியிட்டது.

 

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராக யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், விஜய் கட்சியின் விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

தேர்தல் ஆணையத்தில் தவெக கட்சி வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்டது குறித்து விஜய் பேச வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ள மாநாட்டின் தேதியையும் விஜய் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Right Menu Icon