--- --:--:-- --

5,8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்க..!

16

5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி புதுச்சேரியில் சட்டக்கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதிய பேருந்து நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர்கள் புதுச்சேரியில் இருந்த கல்வி வாரியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டுமெனவும் புதிய கல்விக் கொள்கை 2019 தடை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். தகவலறிந்து நிகழ்வு இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மறியலால் பேருந்து நிலையம் பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon