--- --:--:-- --

டிஜிட்டல் பேனர் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்ப்பு

download (4)

சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமானவர்களை விட்டுவிட்டு டிஜிட்டல் பேனர் தயாரிப்பு நிறுவனங்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தடை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

இது தொடர்பாக டிஜிட்டல் பேனர் தயாரிப்பு நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான எஸ் பஷீர் அகமது என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் சுபஸ்ரீ மரணத்தை தொடர்ந்து சென்னை மாநகராட்சி அனுப்பியுள்ள நோட்டீஸில் தங்கள் அனுமதி இல்லாமல் டிஜிட்டல் பேனர் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ஐந்தாயிரம் அபராதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

யார் விதிகள் மீறி வாடர் வைத்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை வேண்டுமே தவிர தயாரிப்பு நிறுவனங்கள் மீது அரசு அதிகாரிகள் கோபத்தை காட்ட கூடாது என்று மனுவில் கோரியுள்ளார். எனவே தங்கள் தொழில் பாதிக்கப்படுவதாகவும் தங்கள் தொழிலில் மாநகராட்சி அதிகாரிகள் தலையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்துள்ளார்.

 

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் எம் சத்யநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு முன் முறையிட்டனர். மனுவை தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர் .இதையடுத்து ஏற்கனவே நிலுவையில் உள்ள டிஜிட்டல் பேனர் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நாளை இந்த முறைகேடு விசாரணைக்கு வர உள்ளது.

Leave a Reply

Right Menu Icon