பாலங்களை கட்டுங்கள்..! சுவர்களை கட்ட வேண்டாம் எனக் கூறிய ராகுல் காந்தி..!
விவசாயிகளுடன் உறவை மேம்படுத்த பாலங்களை கட்டுங்கள் உறவை தவிர்க்கும் வகையில் தடுப்பு சுவர் கட்ட வேண்டாம் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் பகுதிகளில் உள்ள சாலைகளில் காவல்துறையினர் காங்கிரீட் தடுப்புகளை அமைத்து தடைகளை ஏற்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் காவிரி தடுப்புகளை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராகுல்காந்தி.
பாலங்களை கட்டி தொடர்பு ஏற்படுத்துங்கள் சுவர்களைக் கட்டி தொடர்பை துண்டிக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளார். விவசாயிகள் வரும் ஆறாம் தேதி நாடு முழுக்க மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






