--- --:--:-- --

கொரோனாவை குணப்படுத்தும் பபுள்கம் மருந்து..!

7

கொரொனாவிடமிருந்து குணப்படுத்தும் பபிள்கம் மருந்தை அறிமுகப்படுத்தும் முயற்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். தாவரங்களிலிருந்து பெறப்படும் ஒரு வகை புரதப் பொருளில் உமிழ்நீரின் வழியாக பரவும் கொரொனா வைரஸை அழிப்பது நிரூபணமாகியிருக்கிறது.

 

அமெரிக்கா பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் தலைமையிலான விஞ்ஞானிகள் பபுள்கம் மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கொரொனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மும் போதும், இருமும் போதும், பேசும் போதும் வைரஸ் அவர் வாயில் இருந்து வெளியேறி மற்றவர்களை அடையக் கூடும் என்பதால் அதை தடுப்பதற்கு இந்த மருந்து உதவும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

 

இதற்காக மிட்டையா என்ற தாவரத்தில் இருந்து பெறப்படும் புரதம் பயன்படுத்தப்படுகிறது. தற்பொழுது நோயாளிகளிடம் கொடுத்து பரிசோதித்தபோது நல்ல பலனை கொடுத்து இருப்பது உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon