--- --:--:-- --

இரு சக்கர வாகனத்தின் குறுக்கீட்டால் நிலைதடுமாறி கவிழ்ந்த அரசு பேருந்து..!

8

ரசு நகர்ப்புற பேருந்து ஒன்று இருசக்கர வாகனத்தின் குறுக்கீட்டால் நிலைதடுமாறி கவிழ்ந்ததில் அதில் பயணித்த பள்ளி மாணவ-மாணவிகள் உள்பட 12 பேர் படுகாயமடைந்தனர்.

 

சித்தாத்தூர் கிராமத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி விரைந்து சென்று கொண்டிருந்தபோது விழுப்புரம் திருக்கோவிலுக்கு நான்கு சாலை அருகே இருசக்கர வாகனத்தில் வந்த ஊராட்சி மன்ற தலைவர் திடீரென குறுக்கிட்டுள்ளார்.

 

உடனடியாக பேருந்து ஓட்டுனர் பிரேக்கை அழுத்தும் நிலை தடுமாறி சாலையோரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் முதியவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

 

இந்த விபத்து காரணமாக சாலையில் சில மணி நேரம் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon