--- --:--:-- --

கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ள தந்தைக்கு தனது கல்லீரலை வழங்க சிறுவன் கோரிக்கை..!

2

ல்லீரலில் பாதிக்கப்பட்டுள்ள தந்தைக்கு தனது கல்லீரலின் ஒரு பகுதியை வழங்குவதற்கு அனுமதி கோரி உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

 

தனது தந்தையின் தனிப்பட்ட வருமானத்தில் மட்டுமே குடும்பம் செயல்பட்டு வரும் நிலையில் தங்களால் அதிக செலவு செய்து சிகிச்சை மேற்கொள்ள முடியவில்லை என மனுவில் கூறப்பட்டது.

 

எனவே பாதிக்கப்பட்ட தனது தந்தைக்கு தன்னுடைய கல்லீரலின் ஒரு பகுதியை வழங்க அனுமதிக்க கோரப்பட்டுள்ளது. 18 வயது பூர்த்தியாகாத மைனர் சிறுவனால் தனது உடல் உறுப்பு தானத்தை வழங்க முடியுமா என்பது குறித்து உரிய ஆய்வு செய்யுமாறும் அதிகாரிகளுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

Right Menu Icon