--- --:--:-- --

தமிழக ரயில் சேவைக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது..!

2

ரும் 7ஆம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது. தமிழகத்தில் பயணிகள் ரயில் சேவைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதை அடுத்து 13 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே கோரிக்கை விடுத்தது. அதன்படி சென்னை சென்ட்ரல் – கோவை இடையே தினசரி 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

 

சென்னை எழும்பூர் – மதுரை இடையே தினசரி இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன . கோவை – மயிலாடுதுறை சென்னை எழும்பூர் – திருச்சி, சென்னை எழும்பூர் – காரைக்குடி, சென்னை எழும்பூர்- தூத்துக்குடி ஆகிய வழித்தடத்தில் தலா ஒரு ரயில் இயக்கப்பட உள்ளது.

 

இந்த ரயில்கள் அனைத்துமே முன்பதிவு செய்து பயணிக்கும் பெட்டிகளை கொண்டது. நாளை முன்பதிவு தொடங்கும் நிலையில் டிக்கெட் உறுதியானவர்கள் மட்டுமே ரயில் நிலையத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon