--- --:--:-- --

பாஜக ராஜா சிங்கிற்கு ஃபேஸ்புக் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை..!

3

ஃபேஸ்புக்கில் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான கருத்துக்களை பதிவிட்டதற்காக தெலுங்கானாவை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராஜசிங்கிற்க்கு அந்த நிறுவனம் தடை விதித்துள்ளது. தெலுங்கானா மாநில சட்டப்பேரவையின் ஒரே பாஜக எம்எல்ஏவான ராஜாவிற்கு பேஸ்புக் நிறுவனம் தடை விதித்துள்ளது.

 

நிறுவனத்தின் கொள்கைகளை மீறியதற்காக பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் ராஜாவிற்கு தடை விதிப்பதாக அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 

பேஸ்புக் நிறுவனத்தின் அபாயகரமானவர்கள் பட்டியலில் ராஜா சிங் பெயர் சேர்க்க படுவதாகவும் அவரின் தனிப்பட்ட கணக்குகளும் குழுக்களும் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தால் தான் பேஸ்புக் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

பேஸ்புக்கில் தனது அதிகாரபூர்வ கணக்கை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதி கோரி அந்த நிறுவனத்திற்கு கடிதம் எழுத உள்ளதாகவும் கூறியுள்ளார். எனவே வலைதளத்தை பயன்படுத்துவதற்கான உரிமையை ஃபேஸ்புக் அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Leave a Reply

Right Menu Icon