--- --:--:-- --

வெங்காய விலை ஏற்றத்தால் கோடீஸ்வரரான விவசாயி

4

கடன் வாங்கி வெங்காயம் சாகுபடி செய்த விவசாயி ஒருவர் தற்போது விலையேற்றத்தால் பெருமளவில் பொருளீட்டி இருப்பதாக கூறப்படுகிறது. கர்நாடகாவைச் சேர்ந்த மல்லிகார்ஜுனன் என்ற விவசாயி ஐந்து மாதங்களுக்கு முன்பு கடன்வாங்கி வெங்காயம் சாகுபடி செய்திருந்தார்.

 

அண்மையில் 240 டன் வெங்காயத்தை அறுவடை செய்து விற்பனை செய்து வந்தார். தற்போதைய விலை ஏற்றத்தால் அவர் பெருமளவு பணம் சம்பாதித்து இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. சில்லரை விற்பனையில் வெங்காயம் கிலோ 200 க்கு விற்பனையாகி வரும் நிலையில் அவர் மொத்த விலையில் எவ்வளவு ரூபாய்க்கு விற்றார் என்பது தெரியவில்லை.

 

ஆனாலும் தற்போதைய சூழலில் அவருக்கு லட்சக்கணக்கில் வருவாய் கிடைத்திருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த வியாபாரி இரண்டு கோடி ரூபாய் வரை பணம் சம்பாதித்து இருக்க வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon