ஸ்ரீரெட்டியின் கவர்ச்சி புகைப்படங்கள்.. கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்
சர்ச்சைக்குரிய நாயகி என பெயர் எடுத்த நடிகை ஸ்ரீ ரெட்டியின் ஃபேஸ்புக் பதிவு ஒன்று நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. தென்னிந்தியத் திரைப்படங்களில் சர்ச்சை பேச்சுக்கு பஞ்சம் வைக்காதவர் நடிகை ஸ்ரீரெட்டி.
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட பிரபலங்கள் பலர் குறித்து அவர் தெரிவித்த பாலியல் புகார்கள் திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. படங்களில் நடிக்க வைப்பதாக கூறி பல்வேறு நடிகர்கள், இயக்குனர்கள் தன்னை ஏமாற்றிவிட்டதாக புகார் கூறி வந்த ஸ்ரீரெட்டி அரைநிர்வாண போராட்டம் நடத்தி திரையுலகையே கதிகலங்க வைத்தார்.
பட வாய்ப்பிற்காகவே இவ்வாறு ஸ்ரீரெட்டி நடந்து கொள்வதாகவும் அவரது குற்றச்சாட்டுகள் குறித்து பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்றும் திரை பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் சென்னையில் தங்கி திரைப்படங்களில் நடித்து வரும் ஸ்ரீரெட்டி அண்மைகாலமாக இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை தொடர்ச்சியாக செய்து வருகிறார்.
கண் கூசும் அளவிற்கு அரை நிர்வாண புகைப்படங்களை பதிவிடும் ஸ்ரீரெட்டியை நெட்டிசன்கள் விமர்சித்தாலும் எதையும் கண்டுகொள்ளாமல் புகைப்படங்களை தொடர்ந்து பதிவேற்றுவது அவர் மீது அதிருப்தியை ஏற்படுத்துவதாகவும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
என்னதான் ஸ்ரீரெட்டியின் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் விரும்பினாலும் இந்த படங்கள் எல்லாம் அவருக்கு திரைப்பட வாய்ப்பை பெற்றுத் தரப்போவதில்லை என்ற வாதமும் இணையத்தில் முன்வைக்கப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




