--- --:--:-- --

பஸ் மோதிய வேகத்தில் சிதறிய பைக்..!

5

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வாகனம் ஓட்டுவதற்கான உரிய வயதில்லாமல் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த 15 வயது சிறுவனும் உடன் வந்த தம்பியும் தனியார் பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்தனர்.

 

சின்னசாமி என்பவரின் மகன்களான வெள்ளைச்சாமி, வள்ளியப்பன் ஆகியோர் தந்தை டீ வாங்கிக் கொண்டு திரும்பிய பொழுது கம்பரியம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே விபத்து நேரிட்டது.

 

சாலையை கடக்கும் பொழுது வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து இரு சக்கரம் மீது மோதியதாக கூறப்படும் நிலையில் விபத்து குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon