சுவர் இடிந்து விழுந்ததில் துடிதுடித்து உயிரிழந்த சிறுமி..!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அதிகாலை நேரத்தில் ஓட்டு வீடு மண் சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி உயிரிழந்தார்.
நாராயணன் என்பவரது வீட்டு சுவர் இடிந்து விழுந்ததால் படுகாயம் அடைந்த சிறுமி அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.





