பிக்பாஸ் நடிகை சைத்ரா தற்கொலை முயற்சி..!
சின்னத்திரை நடிகையும் பிக்பாஸ் போட்டியாளரும் ஆன சைத்ரா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். குருபர பேட்டை பகுதியை சேர்ந்த சைத்ரா கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி ஏழாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர்.
சின்னத்திரை தொடர்களிலும் இவர் நடித்து வந்தார். நாகார்ஜுன் என்பவரை காதலித்து மணந்த சைத்ரா கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் அவரது காதல் படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானதால் அதிர்ச்சியடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.







