--- --:--:-- --

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரொனா தடுப்பூசி போட அனுமதி தேவை..!

2

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரொனா தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நெருக்கடி அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரொனா பெருந்தொற்று ஒன்றே கால் லட்சத்தை கடந்து அதிகரித்து வருகிறது.

 

இந்த நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரொனா தடுப்பூசி போட அனுமதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு சத்தீஸ்கர் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் இதே கோரிக்கையை மத்திய அரசிடம் வைத்திருந்தனர்.

 

அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதிக்காமல் மத்திய அரசு பிடிவாதமாக இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரமும் குற்றம்சாட்டியிருந்தார்.

 

ஆனால் தடுப்பூசி முதலில் யாருக்கு தேவைப்படுகிறதோ அவர்களுக்கு தருவதே தங்கள் திட்டம் என்றும் யார் விரும்புகிறார்களோ அவர்களுக்கு தருவதில்லை என்றும் மத்திய சுகாதாரத் துறை விளக்கம் அளித்திருந்தது.

Leave a Reply

Right Menu Icon