--- --:--:-- --

கொரொனா பரவலை கட்டுபடுத்துவது தொடர்பாக ஹர்ஷ்வர்தன் இன்று ஆலோசனை..!

4

கொரொனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக உயர்நிலை அமைச்சர்கள் குழுவுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

 

ஏற்கனவே மகாராஷ்டிரா, ஒடிசா உள்ளிட்ட மாநில அரசுகள் தங்களது மாநிலங்களுக்கு மத்திய அரசு குறைந்த எண்ணிக்கையிலான தடுப்பு ஊசிகளை மட்டுமே அளித்திருப்பதாக புகார் தெரிவித்துள்ளன.

 

இதனால் ஒவ்வொரு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை மற்றும்அரசு தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள படுக்கை வசதிகள் வசதிகள் ஆகியவை தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

Leave a Reply

Right Menu Icon