விடுமுறையை கொண்டாட்டமாக கருதாமல் விழிப்புணர்வுடன் இருங்கள்
கொரொனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விடுமுறையை கொண்டாட்டமாக நினைத்துக்கொண்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். கொரொனா தடுப்பு நடவடிக்கையாக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இவ்வாறு கூறியுள்ளார்.







