--- --:--:-- --

நோய் அறிகுறியுடன் சிகிச்சை பெற்ற இருவர் தப்பியோட்டம்!

8

கேரளாவில் கொரொனா அறிகுறியுடன் தனிமைப்படுத்தப்பட்ட 2 பேர் கண்காணிப்பில் இருந்து தப்பி சென்றவர்களை போலீசார் கைது செய்தனர். கொரொனா சிகிச்சை பெறும் நிலையில் தப்பி சென்றால் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என கேரள அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

வளைகுடாவில் இருந்து வந்த இரண்டு பயணிகளுக்கு தொற்று அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அவர்கள் வயநாடு பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் தப்பி சென்றதை அறிந்த போலீசார் அவர்களை தேடிய நிலையில் ஒரு பொது நிகழ்ச்சியில் இருவரும் சிக்கினர்.

 

அவர்களை கைது செய்த போலீசார் பின்னர் ஜாமினில் விடுதலை செய்தனர். இத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாக கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon