முகக்கவசத்தை ரூ.10க்கு மேல் விற்கக்கூடாது
200 மில்லி லிட்டர் கிருமிநாசினிகள் அதிகபட்சமாக 100 ரூபாய் என மத்திய அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. கொரொனா பரவுவதை தவிர்க்க அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் என்றும் கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சில ஆன்லைன் வணிக நிறுவனங்களில் கிருமிநாசினிகள் விலை பல மடங்கு அதிகமாக இருப்பதாக பலர் சமூக வலைதளங்களில் புகார் தெரிவித்திருந்தனர். இதற்கு விளக்கம் அளித்து மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அது 200 மில்லி லிட்டர் அளவு கொண்ட கிருமி நாசினியை அதிகபட்சமாக 100 ரூபாய்க்கு விற்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அதேபோல, சாதாரண முக கவசம் ஒன்றின் விலையை 10 ரூபாய்க்கு மேல் விற்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.







