கோவை சாய்பாபா கோவிலில் சமூக இடைவெளியை பின்பற்றி பாபாவின் 102 சமாதி தின சிறப்பு பூஜை !!
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா கோவிலில் 102 ம் ஆண்டு சமாதி தின ஆராதனை விழா நடைபெற்றது. அரசு விதிமுறைகளுடன் பக்தர்கள் அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு,முக கவசங்களுடன் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம், பாலாபிஷேகம் மற்றும் கலசாபிஷேகம் செய்து,கணபதி,நவக்கிரக உள்ளிட்ட சிறப்பு ஹோமங்கள் செய்து சிறப்பு பூஜைகள் நடந்தது.நாகசாய் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர்கள் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
தமிழக அரசுக்கு நன்றி!
இதனை தொடர்ந்து கோவில் அறங்காவலர் குழு தலைவர் பாலசுப்ரமணியம் மற்றும் துணை தலைவர் பாலசுப்ரமணியம் ஆகியோர் கூட்டாக பேசுகையில் கோவில்களை திறக்க அனுமதி அளித்த தமிழக அரசுக்கு தங்களது நன்றிகளை தெரிவிப்பதாகவும், அரசு விதிமுறைகளுடன் பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்பட்டு அனைத்து பக்தர்களுக்கும் பாபாவின் தரிசனம் கிடைக்கும் விதமாக சமூக இடைவெளியை பின்பற்றி பூஜையை நடத்தியாக தெரிவித்தனர்.







