--- --:--:-- --

பாபா ராம்தேவுக்கு தடை விதிக்க முடியாது.!

10

லோபதி மருத்துவத்துக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்ட பாபா ராம்தேவுக்கு தடை விதிக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

 

தனது குரோனில் மருந்து குணப்படுத்தும் என்றும் அலோபதி மருத்துவ முறை முட்டாள்தனமானது தோல்வியடைந்த ஒன்று என்றும் பாபா ராம்தேவ் பேசியதை எதிர்த்து டெல்லி மருத்துவக் கவுன்சில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

 

மனு மீதான விசாரணையில் அலோபதி மருத்துவம் குறித்து பாபா ராம்தேவ் கூறிய கருத்து சுதந்திரத்தின் கீழ் வரக்கூடிய ஒன்று என்றும் அவர் கருத்தை கூறியதற்கு இவ்வளவு எதிர்ப்பு இருப்பது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

 

வழக்கு பதிவு செய்த நேரத்தில் கொரொனாவுக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்க வேண்டியது தானே எனவும் நீதிபதி கேட்டார் .மேலும் பாபா ராம்தேவ் தனது மருந்து குணப்படுத்தும் என விளம்பரப்படுத்தும் நிலையில் அது குறித்து விளக்கம் அளிக்குமாறு அழைப்பாணை அனுப்பியது. விசாரணையை ஜூலை 13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

அதுவரை பாபா ராம்தேவ் கருத்துக்கள் எதையும் தெரிவிக்க வேண்டாம் என்று நீதிபதி கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Right Menu Icon