--- --:--:-- --

அயோத்தி வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்

Supreme Court 01

அயோத்தி வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

 

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் மற்றும் பாபர் மசூதி அமைந்திருந்ததாக கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்பதில் பிரச்சனை எழுந்தது.

 

இது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், இந்நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகியன, சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று 2010இல் தீர்ப்பு வழங்கியது.

 

இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் 14 பேர் மேல்முறையீடு மனுக்கள் உள்ளன. இவ்வழக்கில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 பேரை கொண்ட அரசியல் சாசன அமர்வு தொடர்ந்து, 40 நாள் விசாரணை நடத்தியது.

 

இவ்வழக்கை விசாரித்து வந்த, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது.

 

இதையொட்டி நள்ளிரவு முதலே, நாடு முழுவதும் முக்கியமான பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அயோத்தி, தற்போது பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அங்கு, திரும்பிய பக்கமெல்லாம் பாதுகாப்பு படையினரே கண்ணில் தென்படுகின்றனர். சர்ச்சைக்குரிய நிலத்தின் அருகே வசித்து வரும் மக்கள், இப்போதே அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேகரித்து வருகின்றனர்.

 

எனினும், வதந்திகளை பரப்பவோ, பதற்றத்தை ஏற்படுத்தவோ கூடாது என மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon