--- --:--:-- --

முதிர்ச்சியற்ற அரசியல் நகர்வும் உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவும்!

fdhfdh
குற்றம் குற்றமே செய்திப் பிரிவு

 

மிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்  கைது நடவடிக்கை குறித்து,  உயர்நீதிமன்றம் வழங்கிய உடனடி நிவாரண உத்தரவும் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளன.

 

இந்த விவகாரம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ அளித்த பேட்டியில், சட்ட ரீதியான பல முக்கிய உண்மைகளையும், அரசியல் பின்புலத்தையும் மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்கு முற்றிலும் அடிப்படையற்றது என்றும், அவர் பேசாத வார்த்தைகளைப் பேசியதாகச் சித்தரித்து ஆரம்ப நிலையிலேயே திட்டமிட்டு பொய் வழக்கு புனையப்பட்டுள்ளது.

 

மக்களின் உரிமைக்காகவும், வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசின் செயல்பாடுகள் குறித்த கேள்விகளை எழுப்புவதைத் தடுப்பதற்காகவும் திட்டமிட்டு இந்த அவசரக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது சட்டத்தின் ஆட்சிக்கு விடுக்கப்பட்ட சவாலாகும்.

 

உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

 

இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்ட உயர்நீதிமன்றம், வழக்கை விசாரித்து உதயநிதி ஸ்டாலினை உடனடியாக இன்றே விடுவிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டத்தின் துஷ்பிரயோகத்திற்கு நீதிமன்றம் அளித்துள்ள உரிய சம்மட்டியடி தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது. நாளை தமிழகச் சட்டப்பேரவையில் பட்ஜெட் (வரவு-செலவுத் திட்டம்) தாக்கல் செய்யப்பட உள்ள மிக முக்கியமான தருணத்தில், எதிர்க்கட்சித் தலைவரைக் குறிவைத்து இத்தகைய கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ஆளுங்கட்சியின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நிர்வாகத் தாமதங்களைச் சுட்டிக்காட்டி, மக்களின் உண்மையான குரலாக எதிர்க்கட்சிகள்தான் ஒலிக்க முடியும்.

அரசியலில் விமர்சனங்களும் சொற்பிரயோகங்களும் புதியதல்ல. கடந்த காலங்களில் முன்னாள் முதல்வர் கலைஞர் போன்ற ஆளுமைகள் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், அதற்குரிய சாணக்கியத்தனமான விளக்கங்கள் மூலம் அவை எதிர்கொள்ளப்பட்டன.

 

ஆனால், தற்போது எவ்வித அரசியல் முதிர்ச்சியும் இல்லாமல், அவசரக்கோலத்தில் எடுக்கப்படும் இதுபோன்ற நடவடிக்கைகள் ஆளுங்கட்சியின் பலவீனத்தையே காட்டுவதோடு, கத்துக்குட்டித்தனமான அரசியலுக்கான சான்றாகவும் அமைகின்றன என்று வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ தனது பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Leave a Reply

Right Menu Icon