“கொரோனாவால் களையிழந்த ஆடி அமாவாசை தினம்” கடற்கரை, நதிக்கரை, அருவிக்கரை, குளக்கரைகள் “வெறிச்”!!
ஆடி அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய லட்சக்கணக்கானோர் கடற்கரை, ஆற்றங்கரை, அருவிக்கரை, குளக்கரைகளில் குவிவது வழக்கம்.
ஆனால் கொரோனா காரணமாக மக்கள் குவிய தடை விதிக்கப்பாட்டு போல் குவிக்கப்பட்டுள்ளதால் இந்தப் பகுதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
இறந்த முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை ஆகிய தினங்களில் தர்ப்பணம் கொடுப்பது இந்துக்களின் வழக்கம். இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது புண்ணியமாக கருதப்படுகிறது.
இந்தநாளில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் மட்டும் நாடு முழுவதும் இருந்து வரும் லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடுவது வழக்கம்.

இதேபோல் காவிரிக்கரையோரம் நெடுகிலும் உள்ள முக்கிய இடங்களில் மக்கள் திரளாக கூடுவர். அது மட்டுமின்றி குற்றாலம் போன்ற அருவிக்கரைகள், கோயில் குளக்கரைகளிலும் கட்டுக்கடங்காத கூட்டம் கூடுவதும் வழக்கம். மேலும் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதும் வழக்கம்.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஆடி அமாவாசை தினமான இன்று தர்ப்பணம் செய்ய கடற்கரை, நதிக்கரை உள்ளிட்ட இடங்களில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டு, மக்கள் யாரும் வரவேண்டாம் என போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மீறுவோரை கண்காணிக்க கூடுதலாக போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை மட்டுமின்றி காவிரி கரையோரப் பகுதிகள், அருவிக்கரைகள், குளக்கரைகள், கோயில் வளாகங்கள் என அனைத்துமே வழக்கத்துக்கு மாறாக இன்று வெறிச்சோடி காணப்படுகின்றன.






