--- --:--:-- --

சாராயம் காய்ச்சும் கும்பலை பிடிக்க முயன்ற காவல்துறையினர் மீது தாக்குதல்..!

4

வேலூரில் சாராயம் காய்ச்சும் கும்பலை பிடிக்க சென்றபோது காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு காவலர்கள் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டம் எரிமலை பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலையடுத்து 8 காவலர்கள் கொண்டு அந்த பகுதிக்கு சென்றது.

 

அப்போது 10 பேர் கொண்ட கும்பல் காவலர்கள் மீது பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில் காவலர்கள் ராகேசுக்கு பலத்த காயம் ஏற்பட்டு வேலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

காவலர்களை தாக்கிய கும்பல் தப்பி ஓடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மலைப்பகுதிக்கு வேலூர் ஏடிஎஸ்பி மதிவாணன் தலைமையில் 90 காவலர்கள் அடங்கிய குழுவினர் விரைந்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon