நடிகர் விஜய் காவி உடையில் இருப்பது போன்று ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்..!
நடிகர் விஜய் காவி உடையில் இருப்பது போன்ற சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு இருப்பது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவி உடையில் நடிகர் விஜய் விவேகானந்தர் உடன் இருப்பது போன்ற போஸ்டர்கள் மதுரையில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.
அதில் விவேகானந்தரின் விஜயமே வருக நல்லாட்சி தருக என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன் எம்ஜிஆர் வேடத்தில் நடிகர் விஜயையும் ஜெயலலிதா வேடத்தில் அவரது மனைவி சங்கீதாவையும் சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.







