--- --:--:-- --

அரியர் மாணவர்களுக்கு எட்டு வாரங்களுக்குள் தேர்வு நடத்த உத்தரவு..!

3

ரியர் மாணவர்களுக்கு எட்டு வாரங்களுக்குள் தேர்வு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரொனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேர்வு எழுத செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

 

இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அப்போது பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின் அடிப்படையிலேயே கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

பல்வேறு முறையில் அரியர் தேர்வு நடத்த அரசுக்கு நீதிமன்றம் வலியுறுத்தியது. வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த போது அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்த இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

ஆன்லைன் மூலமாக நடத்துவதற்காக மே 17ஆம் தேதி குறிக்கப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் அந்தந்த பல்கலைக்கழகங்கள் மூலம் அறிவிக்கப்படும் என்றும் அதற்கு முன்பாக கலந்தாலோசிக்கவும் ஆன்லைன் மூலம் எளிதாக அவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க மாட்டோம் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

அரசின் முடிவை ஏற்பதாக யுஜிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் ஏற்கனவே தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு எட்டு வாரங்களுக்குள் தேர்வு நடத்த உத்தரவிட்ட நீதிபதிகள் அதன் அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைத்தனர்.

Leave a Reply

Right Menu Icon