--- --:--:-- --

தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நபர் அடித்து துன்புறுத்துவதாக நடிகை புகார்..!

2

சுந்தரா டிராவல்ஸ் திரைப்பட நடிகை ராதா தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட காவல் உதவி ஆய்வாளர் அடித்து துன்புறுத்துவதாக போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

 

இதுதொடர்பாக சென்னை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை ராதா அளித்துள்ள புகாரில் தனக்கு திருமணமாகி 16 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்த நிலையில் சாலிகிராமத்தில் உள்ள சொந்த வீட்டில் தாயாருடன் வசித்து வருவதாக கூறியுள்ளார்.

 

தற்போது எண்ணூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றும் வசந்த ராஜ் திருவான்மியூர் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது தம்முடன் பழகி தன்னை தாலி கட்டி திருமணம் செய்துகொண்டதாக நடிகை ராதா தெரிவித்திருக்கிறார்.

 

இதனிடையே தன் மீது சந்தேகம் அடைந்து தகாத வார்த்தைகளால் பேசி அடித்து துன்புறுத்துவதாகவும் வசந்த் ராஜ் மீது நடிகை ராதா புகார் மனுவில் கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon