பிரேக் செயலிழந்த லாரி டோல்கேட் மீது மோதியதில் ஊழியர் பலி..!
ஆந்திராவில் இருந்து கேரளாவை நோக்கி அரிசி மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்தது. லாரி டிரைவர் வண்டியை பலமுறை நிறுத்த முயற்சி செய்து உள்ளார்.
ஆனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி மதுரை – வண்டலூர் அருகே உள்ள டோல்கேட் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில் ஊழியர் ஒருவர் பலியான நிலையில் மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.





