--- --:--:-- --

விமானப் படையின் போர் விமானம் விழுந்து நொறுங்கியது! விமானி உயிர் தப்பினார்!

8

இந்திய விமானப்படையின் போர் விமானம் ஒன்று பஞ்சாப்பில் விழுந்து நொறுங்கியது. விமானி பாராசூட் உதவியுடன் குதித்து உயிர் தப்பினார். இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விழுந்து நொறுங்கியது. சுதாரித்துக் கொண்ட விமானி முன்கூட்டியே பாராசூட் உதவியுடன் குதித்து உயிர் தப்பினார். அவருக்கு தேவையான மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டதாக பஞ்சாப் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

போர் விமானம் விழுந்து நொருங்கியதில் வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை . பயிற்சிக்காக பறந்தபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு விமானம் விபத்துக்குள்ளானதாகவும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் இந்திய விமான படை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon