மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு இலவசமாக மீன்களை வழங்கிய நடிகை நமீதா..!
பிரதமர் மோடியின் எழுபதாவது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழை மக்களுக்கு 370 கிலோ மீன் களை இலவசமாக அந்த கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான நமீதா வழங்கினார்.
பிரதமர் மோடியின் எழுபதாவது பிறந்த தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் பாஜக சார்பில் ஏழைகளுக்கு மீன்கள் இலவசமாக வழங்கப்பட்டன.







