செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து வெளியான அதர்ச்சி தகவல்..!
அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ரத்த நாளங்களின் வலது புறத்தில் 90%, இடதுபுறத்தில் 80 சதவீதம் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவுடன் இருப்பதாக ஓமந்தூரார் மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. செந்தில் பாலாஜி இதயத்தின் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதால் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
காவேரி அப்பல்லோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சையை செய்ய திட்டமா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நீதிமன்ற அனுமதி கிடைக்காவிட்டால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





