சென்னை டு தேனி ரயில் சேவை தொடக்கம்.. தேனியில் மக்கள் மகிழ்ச்சி..!
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து தலைநகர் சென்னைக்கு ரயில் சேவை இன்று தொடங்குகிறது. மதுரை – தேனி இடையே அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு கடந்த ஆண்டு முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டது.
இதனையடுத்து தேனியில் இருந்து போடிநாயக்கனூருக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. அங்கு ஆய்வும் சோதனை ஓட்டங்களும் முடிவடைந்த நிலையில் மதுரையில் இருந்து தேனி வரை முன்பதிவு பயணிகள் ரயில் நாளை முதல் போடிநாயக்கனூர் வரை நீடித்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனுடைய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வாரத்திற்கு மூன்று நாட்களுக்கு புதிய பயணிகள் செய்பவர்களிடப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையை போடிநாயக்கனூரில் மத்திய இணை அமைச்சர் வேல்முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் சென்னையில் இருந்தும், செவ்வாய், வியாழன், ஞாயிறு அன்று போடிநாயக்கனூரில் இருந்து இந்த ரயில் சேலம், கரூர் வழியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





