தங்க கடத்தலில் சிக்கிய நடிகை ரன்யா ராவ் கைது..!
கர்நாடகாவை அதிரவைத்திருக்கும் தங்க கடத்தலில் சிக்கிய ரன்யா ராவ் குறித்து அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. கர்நாடகா தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்களின் வாரிசுகளுக்காக 4% கமிஷனுக்கும் ரூ.50 லட்சத்துக்கும் ஆசைப்பட்டு ‘கடத்தல் குருவி’யாக நடிகை ரன்யா ராவ் மாறியதாகவும் கூறப்படுகிறது.
கர்நாடகா மாநிலம் சிக்மகளூரைச் சேர்ந்த நடிகை ரன்யா ராவ், தமிழில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து வாகா திரைப்படத்தில் நடித்திருந்தார். துபாயில் இருந்து 12 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்ததாக கடந்த் 3-ந் தேதி பெங்களூர் கெம்பே கவுடா விமான நிலையத்தில் ரன்யா ராவ் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
தங்க கடத்தலுக்காகவே தயாரிக்கப்பட்ட பிரத்யேக உடையை மட்டுமே துபாய் செல்லும் ஒவ்வொரு முறையும் ரன்யா ராவ் அணிந்திருந்ததும் உறுதி செய்யப்பட்டது.





