விரைவில் பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்..!
இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் மார்ச் 19ம் தேதி பூமிக்கு வருவார் என்று நாசா தெரிவித்திருக்கிறது. அவரை அழைத்து வர மார்ச் 12ம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ராக்கெட்டை அனுப்புகிறது.
பூமிக்கு திரும்பியவுடன் நான் விண்வெளியை மிஸ் செய்வேன் என்று சுனிதா கூறியிருக்கிறார். அவர் பத்திரமாக பூமிக்கு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.இதனையடுத்து ஸ்பேஸ்எக்ஸின் க்ரூ டிராகன் -10 எனும் விண்கலம் மார்ச் 12ம் தேதி விண்வெளிக்கு செல்கிறது.
பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திலிலிருந்து சுனிதாவும், வில்மோரும் மீட்கப்பட்டு மார்ச் 19ம் தேதி பூமிக்கு பத்திரமாக அழைத்துவரப்படுவார்கள். இந்த பயணத்தில் எதுவும் சிக்கல் இருக்காது என்று சொல்லப்படுகிறது.





