--- --:--:-- --

நடிகை ராதிகாவுக்கு கொரொனா தொற்று உறுதி..!

1

ட்டப்பேரவைத் தேர்தலில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நடிகை ராதிகா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். சட்டப்பேரவை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி மக்கள் நீதிமையமுடன் கூட்டணியிட்டு போட்டியிட்டது.

 

தேர்தலில் தனது கணவர் சரத்குமார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் மற்றும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் நடிகை ராதிகா வாக்களித்த நிலையில் அவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

நடிகை ராதிகாவுக்கு தடுப்பூசி செய்துகொண்ட நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கமல்ஹாசன் முதலமைச்சர் சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ஆகியோர் ராதிகாவுக்கு கொரொனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்ததாக தெரிவித்துள்ளார்.

 

தேர்தல் களத்தில் பரபரப்பாக இருந்தவர்களுக்கு முன்னெச்சரிக்கைகளை மீறி தொற்று தாக்குவதாக குறிப்பிட்டுள்ளார். தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் நோய் தாக்குதலுக்கு அவர்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon