நடிகை நக்மாவுக்கு கொரொனா தொற்று உறுதி..!
திரைப்பட நடிகையும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான நக்மாவுக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர் கடந்த 2ஆம் தேதி அன்று முதல் டோஸ் கொரொனா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளார். இவருக்கு இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டன.
இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது. தனது வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். முதல் டோஸ் கொரொனா தடுப்பூசி போட்டு விடுவோம் என அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம் என்றும் நக்மா கேட்டுக்கொண்டுள்ளார்.







