--- --:--:-- --

பொது இடத்தில் ஆபாசபட சூட்டிங் நடத்தியதையடுத்து நடிகை பூனம் பாண்டே கைது..!

3

கோவா கடற்கரையில் ஆபாச பட சூட்டிங்கில் ஈடுபட்டதாக நடிகை பூனம் பாண்டே கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் சாம் என்பவரை திருமணம் செய்து கொண்ட பூனம் பாண்டே மறுநாளே தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி தாக்கியதாக கணவர் மீது புகார் அளித்தார்.

 

தெற்கு கோவாவின் கேனகோனா கிராமத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பாக சாம் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அப்பகுதியில் பூனம் பாண்டே ஆபாச பட சூட்டிங் எடுத்ததாகவும், இது தொடர்பான வீடியோ வைரலாகி வருவதாகவும் கோவா மாநில கட்சி ஒன்றின் மகளிரணி புகார் அளித்திருந்தது.

 

இதனடிப்படையில் பூனம் பாண்டே கைது செய்யப்பட்டிருக்கிறார்.

Leave a Reply

Right Menu Icon