--- --:--:-- --

மக்களை சந்திக்க முதல்வர் பயப்படுகிறாரா..? மு.க.ஸ்டாலின் கேள்வி..!

4

மீனவர்கள், பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் இன மக்கள், சிறுபான்மையினர் என அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்து விட்டதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் குற்றம் சாட்டியிருக்கிறார்.

 

தமிழகம் மீட்போம் என்ற பெயரில் தூத்துக்குடியில் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்பி கனிமொழி, கீதாஞ்சலி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

அப்போது காணொளி வாயிலாக உரையாற்றிய அந்த கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் கொரொனா பணிகள் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூன்றாவது முறையாக தூத்துக்குடிக்கு வருவதை தள்ளிப் போடுவதற்கு காரணம் என்ன என கேள்வி எழுப்பினார்.

 

எடப்பாடி பழனிசாமி அரசின் ஊழல்கள் முறைகேடுகள் என்று அனைத்தையும் பாஜக பட்டியல் போட்டு வைத்துள்ளதால் மத்திய அரசு சொல்வதற்கெல்லாம் அவர்கள் தலையாட்டி கொண்டிருப்பதாக விமர்சித்தார்.

Leave a Reply

Right Menu Icon